கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் நந்திக்கு பிரதோஷ விழா
ADDED :2410 days ago
கடலூர்: திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோவிலில், நந்திக்கு பிரதோஷ விழா நடந்தது. கடலூர் திருப்பாதிரிபுலியூர் பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர் கோவிலில், பிரதோஷ, விழா
நடந்தது. நேற்று முன்தினம் (ஏப்., 17ல்) மாலை 4:15 மணிக்கு நந்திக்கு பலவித திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து, மூலவர் மற்றும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை
மற்றும் மாலை 5:30 மணியளவில் பிரதோஷ நாயகர் புறப்பாடு நடந்தது.இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.