திருவக்கரையில் வக்கிரகாளியம்மன் கோவிலில் ஜோதி தரிசனம்
மயிலம்:திருவக்கரையில் வக்கிரகாளியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஜோதி தரிசனம் நடந்தது.மயிலம் அடுத்த வக்கிரகாளியம்மன், சந்திர மவுலீஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கபட்டு வழிபாடுகள் நடந்தது.
கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், வரதராஜ பெருமாள், சந்திரமவுலீஸ்வரர், குண்டலி மாமுனி, வக்கிரகாளியம்மன், வக்கிர சனி ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேகம், வழிபாடு
நடந்தது.பவுர்ணமியை முன்னிட்டு இரவு 8:00 மணிக்கு மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் வீதியுலா காட்சி சிறப்பாக நடந்தது. இரவு 12:00 மணிக்கு வக்கிரகாளியம்மன்
கோவிலில் ஜோதி காண்பித்தனர். பவுர்ணமி விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையாளர் ஜோதி, செயல் அலுவலர் நாகராஜன், மேலாளர் ரவி, குருக்கள் சேகர் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.