உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலையில் சித்ரா பவுர்ணமி விழா: குடும்பத்துடன் சென்று மக்கள் தரிசனம்

சென்னிமலையில் சித்ரா பவுர்ணமி விழா: குடும்பத்துடன் சென்று மக்கள் தரிசனம்

சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில், சித்ரா பவுர்ணமி விழாவில், குடும்பம், குடும்பமாக சென்று, மக்கள் தரிசனம் செய்தனர்.

சென்னிமலை சுப்பிரமணியசுவாமி, மலை கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா, நேற்று (ஏப்., 18ல்) நடந்தது. இதையொட்டி பிற்பகல், 3:30 மணிக்கு சிறப்பு ஹோமம், மூலவர் முருகப்பெருமானுக்கு சந்தன அபிஷேகம், மாலை, 6:00 மணிக்கு மஹா தீபாராதனை நடந்தது.

இதை தொடர்ந்து, 6:30 மணியளவில் உற்சவர் புறப்பாடு நடந்தது. மலை அடிவாரத்தில், ஏரளாமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால்,
இரவு, 11:00 மணி வரை, கோவில் நடை திறக்கப்பட்டிருந்தது.

சென்னிமலை நகர மக்கள், வீடுகளில் சமைத்த விதவிதமான உணவு பண்டங்களுடன், குடும்பம், குடும்பமாக, மலைக் கோவிலுக்கு சென்றனர். தரிசனம் செய்து முடித்த பின்,
உணவுகளை உண்டு மகிழ்ந்தனர். ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால், கோவில் வளாகம் களை கட்டியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !