அருணாசலேஸ்வரர் கோவிலில் வசந்த உற்சவம் நிறைவு
ADDED :2410 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வசந்த உற்சவ நிறைவையொட்டி, அண்ணாமலையார் சூலம் ரூபத்தில், அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ விழா, ஏப்., 9ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் காலை உற்சவர் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. வசந்த உற்சவ நிறைவையொட்டி, அண்ணாமலையார் சூலம் ரூபத்தில், அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அய்யங்குளக்கரை மண்டபத்தில் உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையார் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.