உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒரே நாளில் 387 பக்தர்கள் பழநியில் தங்கரதம் இழுத்தனர்

ஒரே நாளில் 387 பக்தர்கள் பழநியில் தங்கரதம் இழுத்தனர்

பழநி, சித்ரா பவுர்ணமி தினமான நேற்று பழநி முருகன் கோயிலில் ஒரே நாளில் 387 பேர் தங்கரதம் இழுத்தனர்.

பழநி முருகன் கோயிலில் தினமும் இரவு 7:00 மணிக்கு தங்கரதத்தில் சின்னக்குமாரசுவாமி புறப்பாடு நடைபெறும். தங்கரதம் இழுக்க ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். தங்கரதம் இழுக்க 3 பேரும், சிறப்பு தரிசனத்திற்கு 5 பேரும் அனுமதிக்கப்படுவர்.ஒரு நாளில் எத்தனை பக்தர்கள் பணம் கட்டியிருந்தாலும், தங்கரதம் ஒரே ஒருமுறை மட்டுமே வெளிப்பிரகாரத்தில் உலாவரும். விழா நேரத்தில் 150க்கும் மேற்பட்டவர்களும், சாதாரண நாட்களிலும் 50 முதல் 100பேர் வரையும் தங்கரதம் இழுப்பர். ஆனால் சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று அதிகப்பட்சமாக 387 பேர் தங்கரதம் இழுத்தனர். இது வழக்கத்தை விட 2 மடங்கு அதிகம். நேற்று விடுமுறை நாள் என்பதாலும் அதிகளவில் பக்தர்கள் வந்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !