உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழைவேண்டி வடபழநி ஆண்டவர் கோயிலில் விளக்கு பூஜை

மழைவேண்டி வடபழநி ஆண்டவர் கோயிலில் விளக்கு பூஜை

சென்னை: நாட்டில் நல்ல மழையை பெய்வித்து தண்ணீர் கஷ்டம் தீர்த்தருள வடபழநி ஆண்டவரை வேண்டிக் கொண்டு கோவிலில் விளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது. சென்னை வடபழநி ஆண்டவர் முருகன் கோவிலில் தக்கராக எல்.ஆதிமூலம் நியமிக்கப்பட்ட பிறகு பல நல்ல காரியங்கள் படிப்படியாக நடந்துவருகிறது.அதில் ஒன்றாக மழை வேண்டி சிறப்பு வழிபாடு சித்ரா பவுர்ணமி நாளான நேற்று நடத்தப்பட்டது.

ஐந்தடி உயர குத்துவிளக்கு அம்பாள் போல அலங்கரிக்கப்பட்டிருந்தது.விளக்கின் இரு பக்கங்களிலும் 108 பெண் பக்தர்கள் மீனாட்சி அம்மன் படத்துடன் அமர்ந்திருந்தனர்.தமிழில் வழிபாடு நடத்திய பின் 1008 சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது.பின் மீனாட்சி அம்மனுக்கு பக்தர்கள் ஆரத்திஎடுத்தனர். நாட்டில் நல்ல மழை பெய்து தண்ணீர் கஷ்டம் தீரவேண்டுமாய் கேட்டுக்கொண்டு தொடர்ந்து மகாஆரத்தி நடைபெற்றது. ஒவ்வொரு மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமை இது போல சிறப்பு விளக்கு பூஜை நடைபெற இருக்கிறது கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் கோவில் நிர்வாக அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !