உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பச்சைவாழி அம்மன் தீமிதி விழா

பச்சைவாழி அம்மன் தீமிதி விழா

 விழுப்புரம்: எரிச்சனாம்பாளையம் மன்னார் சுவாமி பச்சைவாழி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டி எரிச்சனாம்பாளையம் மன்னார்சுவாமி பச்சைவாழி அம்மன் கோவிலில், தீமிதி உற்சவம் கடந்த 10ம் தேதி வள்ளி தெய்வானை வீதியுலா உற்சவத்துடன் துவங்கியது.


தொடர்ந்து, 10 நாட்கள் ஈஸ்வரன், ஈஸ்வரி, பச்சைவாழி அம்மன், வள்ளி, தெய்வானை, முருகன் சுவாமிகளின் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது.இதையடுத்து, 11ம் நாளான நேற்று பகல் 12 மணிக்கு வள்ளி தெய்வானை முருகருக்கு திருக்கல்யாண உற்சவம், பகல் 2 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, மாலை 5 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.நாளை 20ம் தேதி நிறைமதி காப்புகளைதல் உற்சவம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !