திந்திரிணீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம்
ADDED :2520 days ago
திண்டிவனம்: திந்திரிணீஸ்வரர் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சந்திரசேகரர் வீதியுலா நடந்தது. திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் பிரம்மோற்சவ விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றுத்துடன் விழா துவங்கியது.முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. காலை 10 மணியளவில், திந்திரிணீஸ்வரர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜைக்கு பிறகு, சந்திரசேகரர் சுவாமி வீதியுலா புறப்பட்டார்.கோவில் மாடவீதி வழியாக வந்த சுவாமி ஊர்வலத்திற்கு, தீர்த்தவாரி நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.