உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில் தெப்ப உற்சவம்

விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில் தெப்ப உற்சவம்

விழுப்புரம்: விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில் லட்ச தீப விழாவில் நடந்த தெப்ப உற்சவத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப மகோற்சவம் 10ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விமானங்கள் மூலம் சுவாமி வீதியுலா உற்சவம் 11 நாட்கள் நடக்கிறது. 6ம் வைபவமாக வரும் 14ம் தேதி தமிழ் வருடப்பிறப்பு நாளன்று கோவிலில் கருட சேவை காட்சியில் ஆஞ்சநேயருக்கு லட்ச தீப வழிபாடு நடைபெற்றது. 10ம் நாள் 19ம் தேதி தெப்போற்சவக் காட்சி சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம்  செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !