உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடலழகர் பெருமாளுக்கு தங்க யானை வாகனம்

கூடலழகர் பெருமாளுக்கு தங்க யானை வாகனம்

 மதுரை : சென்னை ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டுவிழா கமிட்டி சார்பில் மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலுக்கு 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கமுலாம் பூசிய யானை வாகனம் வழங்கப்பட்டது.இதைதொடர்ந்து ராமானுஜர் சமூக, சமய சிறப்பு சேவை  விருதுகள் மதுரையைச் சேர்ந்த 20 பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டது. பாஷ்யக்காரர் அறக்கட்டளை மன்னார்குடி செண்டலங்காரஜியர், ராமனந்த சுவாமி, வரதன்சந்தர், பாஷ்யக்காரர் அறக்கட்டளை சுஜா அரசகுமார், விளாஞ்சோலைப்பிள்ளை, மதுரை காமராஜ் பல்கலை  துணைவேந்தர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !