பத்ரகாளியம்மன் கோயில் பொங்கல் விழா
ADDED :2670 days ago
சோழவந்தான் : சோழவந்தான் நாடார் தெரு பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா ஏப்.,9ல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. ஏப்.,18ல் பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏப்.,19 மாலை முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.