முத்துமாரியம்மன் கோவில் பூவோடு எடுத்து பக்தர்கள் வழிபாடு
பல்லடம்: பல்லடம், ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழாவில், பக்தர்கள், பூவோடு எடுத்து வழிபட்டு, அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்.பல்லடம் அருகே கொசவம்பாளையம் ரோடு, ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா, ஏப்., 16 அன்று, விக்னேஸ்வர பூஜை, கருப்பண்ணசாமி பூஜை, மற்றும் கிராம சாந்தி பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, பஞ்சலிங்கேஸ்வரர் - கருகாத்த நாயகி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம், பால் குடம், ஆபரண பெட்டி, முளைப்பாலிகை மற்றும் மாவிளக்கு எடுத்து வரப்பட்டது. நேற்று, சக்தி கரகம், உச்சிகால பூஜையுடன் பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. இரவு, பொங்காளியம்மன் கோவிலில் இருந்து, பக்தர்கள் பூவோடு எடுத்து வந்து, அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தி வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன், கருங்காளியம்மன் மற்றும் அங்காளம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.