தங்க கருட வாகனத்தில் வரதராஜர் வீதியுலா
ADDED :2410 days ago
சேலம்: சேலம், பட்டைக்கோவில், வரதராஜ பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழா, கடந்த, 18ல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை, தங்க கருட வாகனத்தில் வரதராஜரை எழுந்தருளச் செய்து, திருவீதி உலா கொண்டுவந்தனர். மாலை, லட்சுமி நரசிம்மர் ஊஞ்சலில் எழுந்தருளச்செய்தனர். இன்றிரவு, 7:00 மணிக்கு, சந்திரபிரபை வாகனத்தில் எழுந்தருளச்செய்து, நெல் அளவை கண்டருள்வார். நாளை காலை, மோகினி அலங்காரம், இரவு, புன்னை மர வாகனத்தில் வரதராஜர் காட்சியளிப்பார். ஏப்., 23ல், கற்பக விருட்ச வாகனம், திருக்கல்யாண உற்சவம், 24ல் திருத்தேர், 25ல் வெண்ணெய்தாழி சேவை, 26ல் தீர்த்தவாரி, 27ல் வெட்டிவேர் சப்பரத்தில் சுவாமி திருவீதி உலா நடக்கும். மே, 4, இரவு, புஷ்ப பல்லக்கில் சப்தாவரணத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடையும்.