போடிபட்டி கோவிலில் யாக வேள்வி பூஜை
ADDED :2410 days ago
உடுமலை:உடுமலை, போடிபட்டியில் பிரசித்தி பெற்ற பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், கும்பாபிேஷக விழா கடந்த 18ம் தேதி துவங்கியது.
கணபதி ேஹாமம், நவக்கிரகம், லட்சுமி ேஹாமங்கள், கோ பூஜை, தன பூஜை நடந்தது. நேற்றுமுன்தினம் யாகசாலை அலங்காரம் துவங்கியது.மாலையில், கும்ப அலங்காரம், மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, முருக பெருமானுக்கு முதல் கால யாக வேள்வி நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வி, 11:00 மணிக்கு விமான கலச ஸ்தாபனம் நடந்தது.மாலையில், மூன்றாம் கால யாக வேள்வி, இரவு, 9:30 மணிக்கு அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் நடந்தது. இன்று காலை, 6:00 மணிக்கு நான்காம் கால யாக வேள்வி, காலை, 9:00 மணிக்கு கலசங்கள் கோவிலுக்கு எடுத்து வருதல், தொடர்ந்து, 9:45 மணிக்கு பால தண்டாயுதபாணி மற்றும் பரிவார சுவாமிகளுக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது.