மோகினி அவதார தரிசனம்: பக்தர்களிடம் கெடுபிடி
ADDED :2410 days ago
மதுரை : அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ராமராயர் மண்டபத்தில் நேற்று முன் தினம் இரவு தசாவதாரம் நடந்தது. முத்தங்கி சேவை, மச்ச, கூர்ம, வாமன, ராம, கிருஷ்ண அவதாரம் காட்சிகள் முடிந்ததும் பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர். இறுதியாக மோகினி அவதாரத் திருக்கோலத்துடன் நேற்று காலை 8:30 மணிக்கு ராமராயர் மண்டப முகப்பு பகுதியில் பெருமாள் மூன்று முறை வலம் வந்தார்.பக்தர்கள் தரிசனம் செய்ய ஏதுவாக முகப்பு பகுதியில் தேவையான இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு எனக்கூறி முகப்பு பகுதிக்குள் பக்தர்களை வர விடாமல் போலீசார் தடுத்தனர். தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.