காஞ்சிபுரம் அத்தி வரதர் வைபவம் குறித்து ஆலோசனை
ADDED :2410 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்தி வரதர் வைபவம் நடத்த தேவையான முன்னேற்பாடுகள் குறித்து, கலெக்டர் பொன்னையா தலைமையில் இன்று (ஏப்., 22ல்) ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம், வரும் ஜூலை மாதம் நடத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இந்து சமய அறநிலையத் துறையும், இதற்கான ஏற்பாடுகளை துவக்கி உள்ளது. ஜூலை மாதம் நடைபெறவுள்ள இந்த விழாவுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் பொன்னையா தலைமையில், இன்று (ஏப்., 22ல்) காலை 11:00 மணிக்கு, கலெக்டர் வளாக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகிகள், இந்து சமய அறநிலையத் துறை உயரதிகாரிகள் பலரும் பங்கேற்கின்றனர்.