உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டாச்சிபுரம் சித்தாத்தூர் கோவிலில் கும்பாபிஷேகம்

கண்டாச்சிபுரம் சித்தாத்தூர் கோவிலில் கும்பாபிஷேகம்

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அடுத்த சித்தாத்தூர் சிவசுப்ரமணிய சுவாமிகள் கோவிலில் நாளை (ஏப்., 23ல்) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

கண்டாச்சிபுரம் அடுத்த சித்தாத்தூர் வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியர், செல்வ வினாயகர், வேணுகோபால், ஆஞ்சநேயர் சுவாமிகள் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் மற்றும் விமானங்களுக்கு, நாளை (ஏப்., 23ல்) காலை 9 முதல் 10:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இன்று (ஏப்., 22ல்) மாலை 4 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி யாகம், சோட சோபசார தீபாராதனை நடக்கிறது.இரவு 9 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா நாராயணசாமி மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !