உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் 3 கோவில்களில் தீர்த்தக்குட ஊர்வலம்

சேலம் 3 கோவில்களில் தீர்த்தக்குட ஊர்வலம்

சேலம்: மாவட்டத்திலுள்ள, மூன்று கோவில்களில், இன்று (ஏப்., 22ல்) கும்பாபிஷேகம் நடக்கிறது. அதையொட்டி, தீர்த்தக்குட ஊர்வலம், நேற்று (ஏப்., 21ல்) நடந்தது.

கல்பாரப்பட்டி, அண்ணமார் சுவாமி கோவிலில், புதிதாக யானை, குதிரை, சேனை ஆகியவற்றை அமைத்து, புதுப்பித்து கோவில் கட்டியுள்ளனர். அதையொட்டி, நேற்று (ஏப்., 21ல்) காலை, கணபதி யாகத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. வேட்டைக்காரன் கோவில் வீட்டிலிருந்து, ஏராளமான பக்தர்கள், தீர்த்தக்குடம் சுமந்து, ஊர்வலமாக, அண்ண மார் கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து, அங்கு, புனிதநீரால் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. இன்று (ஏப்., 22ல்) காலை, 9:00 முதல், 10:00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கும். தொடர்ந்து, சுவாமிகளுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

புதூரில்...: மேட்டூர், நவப்பட்டி ஊராட்சி, புதூரில், ராஜகணபதி, வேப்பிலைக்காரி, சக்தி மாரியம்மன் கோவில், பல லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதை யொட்டி, நேற்று (ஏப்., 21ல்) காலை, திரளான பக்தர்கள், செக்கானூர் காவிரியாற்றிலிருந்து, தீர்த்தக்குடம் எடுத்து, கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.

பெரியமுத்தியம்பட்டியில்...: கொங்கணாபுரம் அருகே, பெரியமுத்தியம்பட்டி, பெரியாண்டிச்சி, புடவைக்காரி ஐயம்மா அம்மன் சுவாமிகள் ஆலயம் புதிதாக கட்டப்பட்டுள்ளன. அதன் ஆலயத்திருப்பணி முடிந்து, கும்பாபிஷேகம், இன்று (ஏப்., 22ல்)நடக்கவுள்ளது. அதில், சுவாமிகள் மீது புனிதநீர் தெளிக்க, ஏராளமான பக்தர்கள், பூலாம்பட்டி காவிரியாற்றிலிருந்து, தீர்த்தக்குடங்களை எடுத்து, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து, கோவிலை அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !