வாழப்பாடி குழந்தை வரம் வேண்டிய பக்தர்களுக்கு உருண்டைச்சோறு
ADDED :2410 days ago
வாழப்பாடி: குழந்தை வரம் வேண்டிய பக்தர்களுக்கு உருண்டைச்சோறு வழங்கப்பட்டது. வாழப்பாடி, அருநூற்றுமலை, பெலாப்பாடி மலை உச்சியில், 300 ஆண்டுகள் பழமையான
வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. அங்கு, சித்திரை திருவிழாவையொட்டி, நேற்று 21ல், கோவில் முகப்பிலுள்ள விளக்கு தூணில் மகா தீபம், கோவில் மண்டபத்தில் விளக்கு தீபங்கள் ஏற்றி, பாரம்பரிய முறைப்படி, சிறப்பு பூஜை நடந்தது. மேலும், பெருமாள் சுவாமியிடம், குழந்தை பாக்கியம் கேட்டு வேண்டிக்கொண்ட பக்தர்கள், கோவில் பிரசாதமாக வழங்கப்பட்ட உருண்டைச்சோற்றை வாங்கி சாப்பிட்டனர்.