வெண்ணந்தூர் அலவாய்மலையில் சித்ரா பவுர்ணமி விழா
ADDED :2410 days ago
வெண்ணந்தூர்: வெண்ணந்தூர் அடுத்த அலவாய்மலை, சித்தேஸ்வர கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டது. வெண்ணந்தூர் அடுத்த அலவாய்மலையில், பிரசித்தி பெற்ற சித்தேஸ்வர கோவில் உள்ளது. இங்கு கொங்கண சித்தர் வழிபட்டு சென்றார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடந்தது.
விநாயகர் பூஜை, கலச பூஜை, நவக்கிரக ஹோமம், சண்முகர் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள்
நடத்தப்பட்டன. மாலையில் மலை உச்சியில் மஹா விஷ்ணு பூஜை, வருண பிரார்த்தனையுடன் சித்த ஜோதி ஏற்றப்பட்டது. நேற்று முன்தினம் (ஏப்., 21ல்) மறு பூஜையுடன் விழா நிறை வடைந்தது. கூனவேலம்பட்டி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.