உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் நரிக்குறவர் காலனி பலபட்டறை மாரியம்மன் கோவில் திருவிழா

நாமக்கல் நரிக்குறவர் காலனி பலபட்டறை மாரியம்மன் கோவில் திருவிழா

நாமக்கல்: நாமக்கல், நரிக்குறவர் காலனியில் உள்ள பலபட்டறை மாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கடந்த, 14ல் காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது. தொடர்ந்து தினமும் மாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. நேற்று (ஏப்., 21ல்)காலை, 9:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் செய்ய, மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டது. இன்று (ஏப்., 22ல்) காலை, 9:00 மணிக்கு கமலாலயகுளத்தில் இருந்து அக்னிசட்டி ஊர்வலம், மாலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதிஉலா நடக்கிறது. இரவு, 8:00 மாவிளக்கு ஊர்வலம், வானவேடிக்கை நடக்கிறது. நாளை கிடா வெட்டுதல், பொங்கல் வைத்தல், கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வரும், 24ல் மஞ்சள் நீராட்டுவிழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !