உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை இஸ்கான் கோயிலில் நாளை கவுர் பூர்ணிமா

மதுரை இஸ்கான் கோயிலில் நாளை கவுர் பூர்ணிமா

மதுரை: மதுரை மணிநகரம் இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் நாளை (மார்ச் 8) கவுர் பூர்ணிமா விழா நடக்கிறது. "கவுர் பூர்ணிமா என்பது கிருஷ்ணரின் அவதாரங்களில் ஒன்றான சைதன்ய மகா பிரபு அவதார நாளாகும். பவுர்ணமியன்று இந்த அவதாரம் ஏற்பட்டதால் "பூர்ணிமா என்ற சொல்லும், பகவான் பொன்னிறத்தில் அவதரித்ததால் கவுரி என்ற சொல்லும் இணைந்து "கவுர் பூர்ணிமா ஆனது. விழாவையொட்டி, நாளை மாலை 6 மணிக்கு சைதன்ய மகாபிரபுவின் சிலைகளுக்கு பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம் அபிஷேகம், சிறப்பு பூஜை, நாம சங்கீர்த்தனம், மந்திர தியானம் நடக்கிறது. பக்தர்கள் சந்திரோதயம் வரை விரதம் இருந்து, ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபம் செய்வர். பூஜை முடிவில், அபிஷேக தீர்த்தம் அருந்தி விரதம் முடிப்பர். ஹரே கிருஷ்ண மந்திரத்தை தினமும் ஜபிப்பதற்காக ஜபமாலைகளும், அறிவுரைகள் அடங்கிய புத்தகங்களும் குறைந்த நன்கொடையில் வழங்கப்படும். கருணாசிந்து கிருஷ்ணதாஸ் இந்தத் தகவலை தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !