ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் திருமஞ்சனம்
ADDED :2409 days ago
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு ஆந்திர ஸ்ரீமன்நாராயண திரிதண்டி ஜீயர் வருகையை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.மணவாளமாமுனி சன்னிதிக்கு வந்த திரிதண்டி ஜீயரை சடகோப ராமானுஜ ஜீயர் வரவேற்றார். இதன்பின்னர் நேற்று காலை 10:00 மணிக்கு வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாளுக்கு திரிதண்டி ஜீயர் முன்னிலையில் சிறப்பு திருமஞ்சனத்தை ஸ்ரீவாரி முத்துபட்டர் நடத்தினார். இதில் ஆந்திர தொழிலதிபர் ராமேஸ்வரராவ், தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், சுதர்சன்பட்டர், மணியம் கோபி, ஸ்தானிகம் ரமஷே் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.