போடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா
ADDED :2409 days ago
போடி : போடி பரமசிவன் கோயிலில் நடந்து வரும் சித்திரை திருவிழாவையொட்டி, சிவன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தென் திருவண்ணாமலை என போற்றப்படும் போடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா 5 நாட்களாக நடந்து வருகிறது. விழாவினை முன்னிட்டு சிவன் மற்றும் லட்சுமிநாராயணன், முருகன் வள்ளி, தெய்வானைக்கு தினந்தோறும் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் அலங்காரம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் பாலகிருஷ்ணன் தலைமையில், அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் முன்னிலையில் நடந்து வருகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் அருளாசி பெற்று வருகின்றனர்.