வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
ADDED :2395 days ago
வால்பாறை:வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் சித்திரை மாத சங்கடஹர சதுர்த்தி பூஜையையொட்டி விநாயகருக்கு, நேற்று முன் தினம் (ஏப்., 22ல்) மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது.தொடர்ந்து, இரவு, 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. சங்கடம் போக்கும் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில், விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.