உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஜயமாநகரத்தில் 26ல் தீமிதி திருவிழா

விஜயமாநகரத்தில் 26ல் தீமிதி திருவிழா

மங்கலம்பேட்டை : விஜயமாநகரம் பச்சைவாழியம்மன் கோவில் தீமிதி திருவிழா, வரும் வெள்ளிக்கிழமை 26ம் தேதி நடக்கிறது. மங்கலம்பேட்டை அடுத்த விஜயமாநகரம் பச்சை வாழியம்மன் கோவில் தீ மிதி திருவிழா கடந்த 9ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த 10ம் தேதி முதல், நாளை 25ம் தேதி வரை, தினசரி காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு தீபாராதனை, இரவு 9:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது.வரும் வெள்ளிக்கிழமை (26ம் தேதி) தீமிதி திருவிழாவையொட்டி, காலை 6:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை, பகல் 12:00 மணிக்கு அபிஷேக, ஆராதனை நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு நடக்கும் தீ மிதி திருவிழாவில் ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !