இளையான்குடி மழை வேண்டி சிறப்பு தொழுகை
ADDED :2397 days ago
இளையான்குடி : இளையான்குடி சமுத்திர ஊரணியில், நேற்று (ஏப்., 23ல்) மழைவேண்டி பொதுமக்கள் சார்பில், சிறப்பு தொழுகை நடந்தது.இளையான்குடி பகுதியில், கடந்த சில வாரங்களாக, வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல வருடங்களாக, இளையான்குடி பகுதியில், போதிய மழையின்றி, மக்களின் குடிநீர் ஆதாரமும், விவசாயமும் முற்றிலுமாக பாதிப்படைந்து வருகிறது. கடுமையான வெயிலின் தாக்கத்தால், பொதுமக்கள் வெளியே வரவே அஞ்சி வருகின்றனர்.
இதனால், இளையான்குடி கண்மாய்க்கரை அருகில் உள்ள சமுத்திர ஊரணியில் இளையான்குடி பொதுமக்கள் சார்பில், மழைவேண்டி நேற்று (ஏப்., 23ல்)சிறப்பு தொழுகைநடந்தது. இதில், இளையான்குடியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.