உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதுகுளத்தூர் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை

முதுகுளத்தூர் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் செல்வி அம்மன் கோயிலில் உள்ள விநாயகர் சிலைக்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. விநாயகருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள் உட்பட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்பு சந்தனத்தால் விநாயகருக்கு சிலை அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை, தீபாராதனைகள் நடந்தது. கோயில் மகளிர் மன்ற குழு சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் முதுகுளத்தூர்-சாயல்குடி சாலை காந்திசிலை அருகில் உள்ள பிள்ளையார் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜையை முன்னிட்டு விநாயகருக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. சிறப்பு பூஜையில் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !