மாமல்லபுரம் திருவிடந்தை கோவிலில் கருடசேவை விமரிசை
ADDED :2398 days ago
மாமல்லபுரம்: திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், கருடசேவை உற்சவம், கோலாகலமாக நடந்தது.மாமல்லபுரம் அடுத்த, திருவிடந்தையில், திருமண தோஷ பரிகார இடமான இக்கோவிலில், 18ல், அங்குரார்ப்பணம், 19ல் கொடியேற்றம் என, சித்திரை பிரம்மோற் சவம் துவங்கியது.
தொடர்ந்து, தினமும், காலை, இரவு, பல உற்சவங்கள் நடந்தன. நேற்று முன்தினம் (ஏப்.,23ல்) இரவு, கருட சேவை உற்சவம் நடந்தது.அன்று மாலை, நித்ய கல்யாண பெருமாள் மற்றும் தேவியருக்கு, சிறப்பு அபிஷேக திருமஞ்சன வழிபாடு நடந்தது. இரவு, பெருமாள், ஊஞ்சல் சேவையாற்றினார்.நள்ளிரவு, 12:00 மணிக்கு, கருட வாகனத்தில் வீதியுலா சென்ற பெருமாளை, பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர். இன்று (ஏப்., 25ல்) காலை, 10:30 மணிக்கு, திருத்தேரில், சுவாமி வீதியுலா செல்கிறார்.