திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி உண்டியல் காணிக்கை ரூ.1.04 கோடி
ADDED :2398 days ago
திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 18 மற்றும், 19 சித்ரா பவுர்ணமி தினத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அவர்கள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து உண்டியல் காணிக்கை செலுத்தினர். மாதந்தோறும் பவுர்ணமி முடிந்ததும், உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று (ஏப்., 24ல்) உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், ஒரு கோடியே, நான்கு லட்சத்து, 49 ஆயிரத்து, 335 ரூபாய், 197 கிராம் தங்கம், 749 கிராம் வெள்ளி, ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.