உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காய்கறி அலங்காரத்தில் அருள்பாலித்த மாரியம்மன்

காய்கறி அலங்காரத்தில் அருள்பாலித்த மாரியம்மன்

திருப்பூர்: திருப்பூர், திருமலை நகர், ஸ்ரீசெல்வ விநாயகர், ஸ்ரீமாரியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழா நேற்று நடந்தது. பொங்கல் விழாவையொட்டி, 20ம் தேதி பொட்டுசாமி பொங்கல், 22ம் தேதி கம்பம் நடுதல், 23ம் தேதி படைக்கலம் எடுத்தல், அம்மை அழைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, 6:00 மணிக்கு, மாவிளக்கு ஊர்வலமும், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு உற்சவ மகா பூஜை நடந்தது. கோவில் முன்மண்டபம், பச்சை பந்தல் அமைத்து, பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோவில் கருவறை மற்றம் அர்த்த மண்டபத்தில், கறிவேப்பிலை மூலமாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பல்வேறு காய்கறி கொண்டு செய்யப்பட்ட சாகம்பரி அலங்காரத்தில், மாரியம்மன் அருள்பாலித்தார். இன்று காலை அம்மன் திருவீதியுலாவும், மதியம் மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !