காஞ்சிபுரம் ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் உண்டியல் வருவாய் ரூ.2.23 லட்சம்
ADDED :2399 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில் உண்டியலில், 2.23 லட்சம் ரூபாய், காணிக்கையாக கிடைத்தது.காஞ்சி, காமாட்சியம்மன் கோவில் பின்புறம், ஆதிகாமாட்சி என அழைக்கப்படும், பழமையான, ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில் உள்ளது.
இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், உண்டியலில் செலுத்தும் காணிக்கை, ஐந்து மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம்.அதன்படி, கோவிலில் உள்ள மூன்று, உண்டியல்கள் நேற்று 24 ல், திறக்கப்பட்டன.கோவில் செயல் அலுவலர் கவிதா, இந்து சமய அறநிலையத்துறை, காஞ்சிபுரம் சரக ஆய்வாளர், ஜெ.சுரேஷ்குமார் மற்றும் பக்தர்கள் முன்னிலை யில் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், 2.23 லட்சம் ரூபாய், 52 கிராம் தங்கம், 65 கிராம் வெள்ளி இருந்தன.