உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கம்மாபுரம் கோபாலபுரம் கோவிலில் 3ம் தேதி சாகை வார்த்தல்

கம்மாபுரம் கோபாலபுரம் கோவிலில் 3ம் தேதி சாகை வார்த்தல்

கம்மாபுரம்:கம்மாபுரம் அடுத்த கோபாலபுரம் மகா காளியம்மன் கோவிலில், வரும் 3ம் தேதி சாகை வார்த்தல் விழா நடக்கிறது.சித்திரை திருவிழாவை யொட்டி, நாளை 26ம் தேதி காலை 9:00 மணிக்கு காப்பு கட்டுதல், கணபதி ஹோமம் நடக்கிறது. தினசரி, காலை மாலை அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, இரவு விநாயகர், முருகர், மகா காளியம்மன் சுவாமிகள் வீதியுலா வந்து அருள்பாலிக்கின்றனர். தொடர்ந்து, அரிச்சந்திரன் கதைப்பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

முக்கிய நிகழ்வாக வரும் 3ம் தேதி காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, சந்தன காப்பு அலங்காரம், மாலை 4:00 மணிக்கு சாகை வார்த்தல் திருவிழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !