மீனாட்சி கோயில் உண்டியல் வருமானம் ரூ.74 லட்சம்
ADDED :2570 days ago
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் உபகோயில் உண்டியல்கள் கோயில் இணை கமிஷனர் நடராஜன் தலைமையில் திறக்கப்பட்டு காணிக்கை கணக்கிடப்பட்டது.
இதில் 74 லட்சத்து 46 ஆயிரத்து 12 ரூபாய் பணம் தங்கம் 712 கிராம் வெள்ளி 787 கிராம் 176 வெளிநாட்டு ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. இப்பணியில் உதவி கமிஷனர் ராமசாமி கோயில் உதவி கமிஷனர் முல்லை கண்காணிப்பாளர்கள் பக்தர் பேரவை ஐயப்ப சேவா சங்கம் ஓய்வு பெற்ற எஸ்.பி.ஐ. பணியாளர்கள் உட்பட 384 பேர் பங்கேற்றனர்.