சின்னமனுார் சிவகாமியம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம்
ADDED :2399 days ago
சின்னமனுார் : சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான பூலாநந்தீஸ்வரர்-சிவகாமியம்மன் திருக்கல்யாணம் ஏப். 17 ல் நடைபெற்றது. தேரோட்டம் ஏப்., 18 மற்றும் 19 ல் நடந்தது. நேற்று 16ம் நாள் மண்டகப்படிக்காக சுவாமி- அம்பாள் பூப்பல்லக்கில் நகர்வலம் வந்து, சி.என்.எம்.எஸ்., மண்டபத்தில் எழுந்தருளினர்.சின்னமனுார் நாடார் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சங்க தலைவர் பார்த்திபன் தலைமை வகித்தார். செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சி.என்.எம்.எஸ்., பள்ளி செயலாளர் கனகவேல், சங்க உபதலைவர் ஜெயச்சந்திரன், துணைச்செயலாளர் அன்புகுமார் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.