தேர்களின் அலங்கார பணி முகூர்த்தக்கால் பூஜை
ADDED :2399 days ago
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், தேர்த்திருவிழாவை முன்னிட்டு, தேர்களுக்கு நேற்று முகூர்த்தக்கால் நடப்பட்டது.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில்களில், வைகாசி விசாக தேர்த்திருவிழா, அடுத்த மாதம், 18, 19ம் தேதிகளில் நடக்கஉள்ளது. முதல்கட்டமாக, தேர்களை தயார்படுத்தும் பணி துவங்கியுள்ளது. விநாயகர் தேர் உட்பட, மூன்று தேர்தல்களும் தண்ணீரால் துாய்மை செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை, 9:00 மணிக்கு, தேர்தலுக்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.சிவாச்சார்யார்கள், வேதமந்திரங்கள் ஓதி, சிவ வழிபாட்டுடன், விஸ்வேஸ்வர சுவாமி தேருக்கு முகூர்த்தக்கால் நட்டனர். பட்டாச்சார்யார்கள், வீரராகவப்பெருமாள் தேருக்கு, முகூர்த்தக்கால் நட்டனர். செயல் அலுவலர் சங்கரசுந்தரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.