உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி., ஆண்டாளுக்கு கள்ளழகர் பட்டு

ஸ்ரீவி., ஆண்டாளுக்கு கள்ளழகர் பட்டு

ஸ்ரீவில்லிபுத்துார்: மதுரை கள்ளழகர் சாற்றி களைந்த பட்டு ஆண்டாளுக்கு சாற்றும் வைபவம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் சிறப்புடன் நடந்தது. சித்ராபவுர்ணமியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சாற்றி களைந்த பட்டு, மாலை, கிளி ஆகியவற்றை அணிந்து கள்ளழகர் ஆற்றில் இறங்குவது வழக்கம்.  

இதற்கு எதிர்சீராக கள்ளழகர் சாற்றி களைந்த பரிவட்டம், தகடி, உறுமால், பட்டு கயிறு ஆகியவை ஆண்டாளுக்கு சாற்ற கொடுக்கபடும். இதன்படி கள்ளழகர் சாற்றி கொடுத்த மங்கள பொருட்கள் கொண்டு வரபட்டு நேற்று காலை ஸ்தானிகம் ரமேஷ் வீட்டில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு 7:00 மணிக்கு அங்கிருந்து கோயில் மரியாதையுடன் கொண்டுவரபட்ட மங்களபொருட்கள்  வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் எழுந்தருளிய  ஆண்டாளுக்கு  சாற்றபட்டு சிறப்பு பூஜைகளை ராஜாபட்டர் செய்தார்.   திரளான பக்தர்கள் தரிசித்தனர். தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், வேதபிரான் அனந்தராம பட்டர், சுதர்சன்பட்டர், ஸ்தானிகம் கிருஷ்ணன், ரமேஷ், பிரசன்ன வெங்கடேசன், மணியம் கோபி மற்றும் பட்டர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !