ஆனைக்குட்டம் அய்யனார் கோயிலில் சிறப்பு பூஜை
விருதுநகர் : விருதுநகர் ஆணைக்குட்டம் அணையையொட்டிய அய்யனார் கோயிலில் மழைவேண்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் கிடா வெட்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. விருதுநகரில் கடந்த சில மாதங்களாக குடிநீர் தட்டுபாடு அதிகரித்துள்ளது. 4 நாட்களுக்கு ஒரு முறை சப்ளை செய்யப்பட்ட குடிநீர் தற்போது 10,15 நாட்களுக்கு ஒரு முறை சப்ளை செய்யப்படுகிறது.
நகராட்சியின் 36 வார்டுகளிலும் தினசரி பகுதிவாரியாக 50 லட்சம் லிட்டர் வரை குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. ஒண்டிப்புலிஆனைக்குட்டத்தில் இருந்து 25 லட்சம் லிட்டரும், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து 29 லட்சம் லிட்டரும் குடிநீர் பெறப்பட்டு வந்தது.
ஆனைக்குட்டம் அணையில் நீர்மட்டம் குறைய, ஒண்டிப்புலி குடிநீர் திட்டம் மூலம் நகராட்சி நிர்வாகம் குடிநீர் பெறுகிறது. இங்கிருந்து 12 லட்சம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. விருந்து படைப்புஇதன் மூலம் குடிநீர் பற்றாக்குறை தீர்ந்தபாடில்லை.
கோடையை சமாளிக்க கூடுதல் குடிநீர் தேவைப்படுகிறது. இதை தொடர்ந்து மழை வேண்டி விருதுநகர் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆனைக்குட்டம் அணையை யொட்டிய சுக்கிரவார் பட்டி கூடமுடையார் அய்யனார் கோயிலில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி தலைமையில் நடந்த இதில் மழைவேண்டி கிடா வெட்டினர். இதன் ஆனைக்குட்டம் அணையில் வைத்து சமைத்து விருந்து படைத்தனர். நகராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்