உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணியில் 1,008 விளக்கு பூஜை

திருப்புல்லாணியில் 1,008 விளக்கு பூஜை

திருப்புல்லாணி: கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் கிராம முன்னேற்றத்திட்டம் சார்பில், திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் உலக நன்மைக்காக 1008 விளக்கு பூஜை பிரகார வளாகத்தில் நடந்தது.

ஆன்மிக சொற்பொழிவு, மாதர் மாநாடு, குறு நாடகம் நிகழ்த்தப்பட்டது. பத்மாஸனித்தாயார் சன்னதி, பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளிட்ட இடங்களில் ஏராளமான பெண்கள் விளக்குபூஜையில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை விவேகானந்த கேந்திர சகோதரிகள், சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !