உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திட்டக்குடியில் மகா கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா

திட்டக்குடியில் மகா கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா

திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழாவில் ஏராளமான
பக்தர்கள் பங்கேற்றனர்.

திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழாவையொட்டி, நேற்று முன்தினம் (ஏப்., 25ல்) மாலை,
பகவத் பிரார்த்தனை, அனுக்ஞை, மகாசங்கல்பம், புண்யாஹவாசனம், அக்னி பிரதிஷ்டை, நித்யஹோமம், பூர்ணாஹுதி நடந்தது.நேற்று (ஏப்., 26ல்) காலை கோ பூஜை, சுதர்சன ஹோமம், கலசபூஜை, திருமஞ்சனம், கடம் புறப்பாடு, கலசாபிஷேகம் நடந்தது.

பாப்பாக்குடி வெங்கடேச பட்டாச்சாரியார் தலைமையிலான குழுவினர் முதலாம் ஆண்டு உற்சவ விழாவை நடத்தி வைத்தனர். விழாவில் பஞ்சவடீ விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவில் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், அறங்காவலர் குழு தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், அறங்காவலர்கள் ராதாகிருஷ்ணன், பொன்னுசாமி மற்றும் உபயதாரர்கள், பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.மாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !