விருத்தாசலம் நாகாத்தம்மன் கோவில் சித்திரை திருவிழா
ADDED :2400 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம், செல்வராஜ் நகர் நாகாத்தம்மன் கோவில் சித்திரை திருவிழா நேற்று (ஏப்., 26ல்) நடந்தது.
விருத்தாசலம், செல்வராஜ் நகர் நாகாத்தம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 19ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, தினசரி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நேற்று (ஏப்., 26ல்) மணிமுக்தாற்றிலிருந்து தீ சட்டி, பால்குடம்
ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.பின்னர், அம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து, அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை நடந்தது. இதில், ஏராளமானோர்
பங்கேற்று வழிபட்டனர்.