உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்ருட்டி திரவுபதியம்மன் பிரம்மோற்சவ விழா

பண்ருட்டி திரவுபதியம்மன் பிரம்மோற்சவ விழா

பண்ருட்டி: பண்ருட்டி திரவுபதியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, நேற்று (ஏப்., 26ல்) நடந்த தீமிதி திருவிழாவில், உற்சவர் கிருஷ்ணர், அர்ஜூனன் சிறப்பு அலங்காரத் தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.பண்ருட்டி ராஜாஜிசாலை, திரவுபதியம்மன் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 16ம் தேதி துவங்கி, 2 ம் தேதி வரை சக்கரவர்த்தி கோட்டை உற்சவம் நடந்தது.நேற்று (ஏப்., 26ல்)மாலை தீமிதிதிருவிழாவை முன்னிட்டு, காலை 9:00 மணிக்கு, திரவுபதியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது.

மாலை 3:00 மணிக்கு கோவில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்தனர். மாலை 5:00 மணிக்கு கோவிலில் இருந்து சக்திகரகம் புறப்பட்டு ஊர்வலமாக களத்துமேடு பகுதியில் மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது.இன்று 27ம் தேதி மஞ்சள் நீர் பட்டாபிஷேகம், வரும் 3 ம்தேதி நிறைமணி உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !