மடத்துக்குளம் கோட்டை மாரியம்மன் கோவில் கொழுமத்தில் விழாக்கோலம்
ADDED :2453 days ago
மடத்துக்குளம்:மடத்துக்குளம் தாலுகா கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில், பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
அமராவதி ஆற்றங்கரை ஓரம் உள்ள இந்த கோவிலில், ஆண்டுதோறும் கோடையில் திருவிழா நடப்பது வழக்கம்.இந்த ஆண்டு, இக்கோவிலில் கம்பம் நடுதலுடன் விழா தொடங்கியது. கடந்த 24ம் தேதி விக்னேஸ்வரபூஜை, மற்றும் நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.வரும் மே 15ம் தேதி
வரை நடைபெறும் திருவிழாவில், கொழுமம் மற்றும் பல்வேறு கிராமங்களைச்சேர்ந்த மக்கள் கலந்து கொள்கின்றனர்.