காளியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா
ADDED :2400 days ago
மயிலம்: மயிலம் ஒன்றியம், பேரணி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் நேற்று சாகை வார்த்தல் விழா நடந்தது.காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கிராம பொது மக்கள் ஊரணி பொங்கல் வைத்து, அம்மனுக்கு மகா தீபாராதனை செய்தனர்.பக்தர்கள் கோயில் வளாகத்தில் அங்க பிரதட்சணம் செய்து நேர்த்தி கடன் செலுத்தினர். சாகை வார்த்தல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.