லட்சுமிவராகர் கோயில் வராக ஜெயந்தி விழா
ADDED :2400 days ago
மதுரை: மதுரை - மேலுார் ரோட்டில் அயிலாங்குடி கிராமம் ஏ.பி. டவுன் ஷிப் லட்சுமி வராகர் பெருமாள் கோயிலில் வராக ஜெயந்தி விழா மே 2ல் நடக்கிறது. அன்று காலை 10:00 மணிக்கு சுவாமிக்கு விசஷே சங்கல்ப புண்யாக வாசனம், கும்ப ஸ்தாபனம், வேத திவ்யபிரபந்த பாராயணம், திருமஞ்சனம், சாற்றுமுறை கோஷ்டி, அலங்காரம், தீபாராதனை நடக்கும். பகல் 1:45 மணிக்கு ஞானப்பிரான் வைபவம் என்னும் தலைப்பில் ஜெகன்னாத பராங்குச தாசனின் சொற்பொழிவு நடக்கிறது. தொடர்புக்கு: 93441 02741