உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பச்சமலை நடராஜருக்கு 108 சங்காபிஷேகம்

பச்சமலை நடராஜருக்கு 108 சங்காபிஷேகம்

கோபி: பச்சமலையில், சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் சுவாமிக்கு, சித்திரை மகா அபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடந்தது. கோபி, பச்சமலையில், பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு சிவகாமி அம்பாள், சமேத நடராஜர் சுவாமிக்கு, சித்திரை  மாத திருவோணத்தை ஒட்டி, சிறப்பு அபிஷேகம், 108 சங்காபி?ஷகம் மற்றும் மகா தீபாராதனை, நேற்று நடந்தது. தவிர, தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் உள்ள காலபைரவருக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. வெளிக்கவச அலங்காரத்தில்,  காலபைரவர் காட்சியளித்தார். பெண் பக்தர்கள், சாம்பல் பூசணியில், தீபமேற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !