உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜடை மாரியம்மன் கோவில் திருவிழா

ஜடை மாரியம்மன் கோவில் திருவிழா

காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே, கயிறுகாரன்கொட்டாயில், ஸ்ரீ ஜடை மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. திருவிழாவை முன்னிட்டு, 24ல், கூழ் ஊற்றி வழிபடுதலும், 25ல், பொங்கல் படையல் வைத்து சிறப்பு பூஜைகள், அன்று பிற்பகலில் மாவிளக்கு எடுத்தல்,  அலகு குத்துதல், கரகம் எடுத்து ஆடுதல், இன்னிசை கச்சேரி ஆகியவை நடந்தன. இதையடுத்து, 26ல், ஜடை மாரியம்மன் திருவீதி ஊர்வலம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன், கோவிலில் இருந்து புறப்பட்டு, முக்கிய தெருக்கள் வழியாக, ராமசாமி கோவில்  வரை சென்று மீண்டும் கோவிலை அடைந்தது. இதைத்தொடர்ந்து, மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !