உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பாதுகாப்பு அதிகரிப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பாதுகாப்பு அதிகரிப்பு

முக்கிய கோவில்களில்பாதுகாப்பு அதிகரிப்பு- நமது நிருபர் -இலங்கையில், குண்டுவெடிப்பு மற்றும் தொடர் தீவிரவாத மிரட்டலால், மதுரை, மீனாட்சி அம்மன் கோவிலில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இக்கோவிலுக்கு, ஏற்கனவே, பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்  உள்ளது. இதன் காரணமாக, 24 மணி நேரமும், சுழற்சி முறையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று, போலீஸ் கமிஷனர், டேவிட்சன் தேவாசீர்வாதம், கோவிலில் ஆய்வு செய்தார்.ஆடி வீதி மற்றும் கோவில் வளாகப் பகுதியில், 150 போலீசார்,  பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூடுதலாக, 45 போலீசாரை நியமித்த கமிஷனர், கோவிலுக்கு வெளியே, சித்திரை வீதிகள் மற்றும் கோவிலுக்கு வரும் பாதைகளில், கண்காணிப்பை, பலப்படுத்த உத்தரவிட்டார். சூழ்நிலைக்கு ஏற்ப, போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.  திருவண்ணாமலை மாவட்டத்தில், முக்கிய வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், ரயில்வே ஸ்டஷேன் ஆகியவற்றில், போலீசார் நேற்று, தீவிர சோதனை நடத்தினர். நேற்று காலை, போலீசார், அருணாசலேஸ்வரர் கோவிலில், சோதனை நடத்தினர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !