உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்ரகாளி அம்மன் கோயில் விளக்கு பூஜை

பத்ரகாளி அம்மன் கோயில் விளக்கு பூஜை

 முதுகுளத்துார் : முதுகுளத்துார் இந்து நாடார் உறவின்முறைக்கு தனித்து பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோயில் பொங்கல் திருவிழா மற்றும் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.நாடார் உறவின் முறைத் தலைவர் சிவக்குமார் தலைமைவகித்தார். செயலாளர்  பெருமாள், பொருளாளர் அசோகன் முன்னிலை வகித்தனர். கடந்த ஏப்.,23ல் பக்தர்கள் காப்புகட்டுதல் நிகழ்ச்சி கொடியேற்றத்துடன் துவங்கியது.

அம்மனுக்கு மஞ்சள் பொடி, அரிசி மாவு, தேன், பால், தயிர், சங்காபிஷேகம் மற்றும் சிறப்புபூஜைகள் நடந்தது.நான்காம் நாள் பூஜையாக 2008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.பூஜையில் முதுகுளத்துார் சுற்றியுள்ள ஏராளமானோர் பெண்கள் கலந்து கொண்டனர்.  அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாரதனை நடந்தது. விளக்குபூஜைக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் நாடார் உறவின் முறையினர் ஏற்பாடு செய்தனர்.விழா கமிட்டியாளர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !