திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்
ADDED :2399 days ago
பண்ருட்டி:பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜர், சிவகாமசுந்தரி சுவாமிகளுக்கு 108 வலம்புரி சங்காபிஷேகம் நடந்தது.
பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜர், சிவகாமசுந்தரி சுவாமிகளுக்கு ஆண்டுதோறும் 6 முறை சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் சித்திரை மாத திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு, உற்சவர் நடராஜர், சிவகாமசுந்தரி சுவாமிகளுக்கு காலை 10 மணிக்கு கலசஸ்தாபனம், 10:30 மணிக்கு 108 வலம்புரி சங்காபிஷேகம், 12:00 மணிக்கு சிறப்புஆராதனை நடந்தது.மாலை 6:00 மணிக்கு உற்சவர் நடராஜர் சிவகாமசுந்தரி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.